For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தங்கையின் கள்ள உறவு..!! உச்சகட்ட கோபத்தில் சீர்வரிசையோடு சென்ற அண்ணன்..!! கணவரை பார்த்ததும் ஷாக்..!! கள்ளக்காதலன் கதி..?

Forgetting her family, Anjali has been flirting with Kallakadalan often in private.
08:08 AM Oct 15, 2024 IST | Chella
தங்கையின் கள்ள உறவு     உச்சகட்ட கோபத்தில் சீர்வரிசையோடு சென்ற அண்ணன்     கணவரை பார்த்ததும் ஷாக்     கள்ளக்காதலன் கதி
Advertisement

தெலங்கானா மாநிலம் கோதாவரிகனியில் சிங்கரேணி அரசு மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில், இங்கு தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருபவர் வினய். இவருக்கு 30 வயது. இவருக்கு அஞ்சலி என்ற 25 வயது பெண் அறிமுகமானார். அஞ்சலியும், வினய் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்தான். அஞ்சலிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால், நாளடைவில் வினய்க்கும், அஞ்சலிக்கும் இடையேயான பழக்கம் நெருக்கமாகிவிட்டது.

Advertisement

குடும்பத்தை மறந்த அஞ்சலி, கள்ளக்காதலனுடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அஞ்சலியின் இந்த விவகாரம் அவரது குடும்பத்தினருக்கு தெரிந்துவிட்டது. குறிப்பாக கணவனும், அண்ணனும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அஞ்சலி கள்ளக்காதலனை கைவிட்டபாடில்லை. அதேபோல வினய்யின் வீட்டிலும் விஷயம் தெரிந்து, அவரது பெற்றோரும் கொந்தளித்து விட்டனர்.

ஆனால், வினய்யும் அஞ்சலியை கைவிட முடியாது என்று சொல்லிவிட்டார். எக்காரணம் கொண்டும் வினய்யுடனான பழக்கத்தை கைவிட முடியாது என்று கறாராக அஞ்சலியும் சொல்லிவிட்டார். ஒருகட்டத்தில், அஞ்சலி 4 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். வினய்யும், அஞ்சலியை அழைத்து கொண்டு, தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அஞ்சலியை வீட்டிற்குள் சேர்க்க முடியாது என்று வினய்யின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். எனினும், மகனின் விருப்பத்தை மறுக்க முடியாமல் இருவரையும் ஏற்றுக் கொண்டனர்.

பிறகு அவர்களின் விருப்பப்பப்படி ஹனுமன்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கேயே தங்க வைத்தனர். ஆனால், அஞ்சலி வீட்டில் அனைவரும் கொந்தளிப்புடன் இருப்பதால், யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ரகசியமாக குடி வைத்திருந்தனர். இதற்கிடையே, தன்னுடைய தங்கை அஞ்சலி வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டதால், அண்ணன் உச்சக்கட்ட ஆத்திரத்தில் இருந்தார். அதனால் ஓடிப்போன ஜோடியை தேட ஆரம்பித்தார். ஆனால், எங்கு தேடியும் கிடைக்காததால், அஞ்சலிக்கு போன் செய்து பாசமாக பேசுவது போல் நடித்துள்ளார்.

"சத்துலபதுகம்மா திருவிழா வருவதால், பிறந்த வீட்டின் சீர் செய்வது முறையாகும். அதனால், அந்த சீரை வாங்கிக் கொண்டு, நீ உன் விருப்பப்படியே வாழலாம். ஆனால், நீ இருக்கும் இடம் தெரியாததால் சீர் கொண்டு வந்து தர முடியவில்லை. வினய்யை மட்டும் நான் சொல்லும் இடத்துக்கு அனுப்பி வைத்தால், அவருடன் சேர்ந்து உன் வீட்டிற்கு நானே சீர்வரிசைகளை கொண்டு வருகிறேன்" என்று பேசியுள்ளார்.

இதை நிஜமென்று நம்பிய அஞ்சலி, வினய்யிடம் விவரத்தை சொல்லி, தன்னுடைய அண்ணனை வீட்டுக்கு அழைத்து வரும்படி கூறியுள்ளார். அதன்படி வினய்யும், அஞ்சலியின் அண்ணன் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். அங்கே, அஞ்சலியின் அண்ணனும், அஞ்சலியின் கணவரும் இருந்தனர். ஆனால் அவர்தான் அஞ்சலியின் கணவர் என்பது வினய்க்கு தெரியாது. அஞ்சலி அண்ணனின் நண்பர் என்று நினைத்து, இருவரையுமே தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

வீட்டிற்கு அண்ணனுடன் சேர்ந்து, தன்னுடைய கணவரும் வீட்டுக்குள் வந்து நிற்பதை பார்த்ததுமே அஞ்சலிக்கு தூக்கி வாரிப்போட்டது. பிறகு இரு தரப்பினரிடமும் கடுமையான வாக்குவாதம் வெடித்தது. ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த அஞ்சலியின் அண்ணனும், கணவரும், வினய்யின் வாக்குவாதத்தை கண்டு, மேலும் ஆவேசம் அடைந்தனர். பின்னர், அஞ்சலியை ஒரு ரூமில் தள்ளி பூட்டி விட்டனர். பிறகு வினய்யை இருவரும் சேர்ந்து சரமாரி தாக்கி அங்கிருந்த கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

வினய் மற்றும் அஞ்சலியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், போலீசார் வருவதற்குள் வினய்யின் உயிர் பறிபோயிருந்தது. இதற்கிடையே வினய்யின் பெற்றோர், தங்கள் மகனின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். தங்கள் மகனின் இந்த நிலைமைக்கு காரணம் அஞ்சலிதான் என்று கூறி, அஞ்சலியை தாக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அங்கிருந்த போலீசார் அஞ்சலியை பாதுகாப்பாக மீட்டனர். இப்போது, தப்பியோடிய அஞ்சலியின் கணவரையும், அண்ணனையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More : ’ரொம்ப பயங்கரமான ஏரியா இருக்கும் போல’..!! இரவில் நடக்கும் மர்மம்..!! எங்கு தெரியுமா..?

Tags :
Advertisement