"எங்க அப்பா எங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரு, அதான் எரிச்சுட்டோம்"; போலீசாரை அதிர வைத்த சிறுமிகள்..
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், முகல் சோக் என்ற பகுதியை சேர்ந்தவர் 48 வயதான அலி அக்பர். 3 திருமணங்கள் செய்த இவருக்கு 10 குழந்தைகள் உள்ளனர். இவரது முதல் மனைவி உயிரிழந்த நிலையில், இவர் தனது இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தூங்கிக்கொண்டிருந்த அக்பர் மீது, அவரது 12 மற்றும் 15 வயதான மகள்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதனால் பலத்த தீக்காயம் அடைந்த அக்பரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து, தீ வைத்து எரித்த இரு மகள்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, "எங்கள் தந்தை எங்களை பாலியல் ரீதியாக கொடுமை படுத்தினார். இதனால் நாங்கள் இருவரும் அவரை கொலை செய்ய செய்ய திட்டமிட்டோம். அதன் படி, அவரது வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி, நெருப்பைப் பற்ற வைத்து எரித்து விட்டோம்" எனக் கூறியுள்ளனர்.
Read more: திருப்பதியை உலுக்கிய கோர சம்பவம்.. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்தது என்ன?