For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"உல்லாசத்திற்கு மட்டும் தான் நீ, கல்யாணத்துக்கு இல்ல"; கள்ளக்காதலனால் 8 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்..

man sexually abused a woman and refused for marriage
06:35 PM Jan 09, 2025 IST | Saranya
 உல்லாசத்திற்கு மட்டும் தான் நீ  கல்யாணத்துக்கு இல்ல   கள்ளக்காதலனால் 8 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்
Advertisement

கர்நாடக மாநிலம், குந்தப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அனுஷா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனியாக வாழ்ந்து வந்த அனுஷாவுக்கு பவன் என்ற வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனிடையே இருவரும் நெருக்கமாக பழகியதில் அனுஷா, கர்ப்பமானார். இதனையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பவனிடம் அனுஷா கேட்டுள்ளார். ஆனால் பவன், உல்லாசத்திற்கு மட்டும் அனுஷாவை பயன்படுத்தி விட்டு, திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

Advertisement

இந்நிலையில், 8 மாத கர்ப்பிணியான அனுஷா, அவரது காதலன் பவன் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனுஷாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 8 மாத கர்ப்பிணி, உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read more: பணத்திற்காக மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கி…. அதை VIDEO காலில் ரசித்த கணவன்…!

Tags :
Advertisement