முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் வரும் டிசம்பர் 5ம் தேதி...! அரசு முக்கிய அறிவிப்பு

Since December 5th is an auspicious day, there will be more registrations at the Registrar's offices, so additional token allocations have been ordered.
05:14 PM Dec 03, 2024 IST | Vignesh
Advertisement

வரும் டிசம்பர் 5ம் தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக பத்திரம் பதிவு செய்யும் என்பதால் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய உத்தரவு.

Advertisement

இது குறித்து பத்திரப் பதிவுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்வது வழக்கம். தற்போது கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினமான 05.12.2024 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதனை ஏற்று கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினமான 05.12.2024 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Registration Departmenttn governmentதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article