முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"டக்குன்னு சுறுசுறுப்பாக..." 5 நிமிடத்தில் செய்யக்கூடிய சிம்பிள் எனர்ஜி ட்ரிங்க்.!

07:00 AM Dec 01, 2023 IST | 1newsnationuser4
Advertisement

நாம் அனைவரும் சுறுசுறுப்பாக இருப்பதையே விரும்புவோம். அலைச்சல் காரணமாக பல நேரங்களில் அதிகப்படியான சோர்வு ஏற்படும் இந்த சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெறுவதற்கு சுவையான மற்றும் எளிமையான இந்த ஜூஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

Advertisement

இந்த எனர்ஜி ட்ரிங்க் செய்வதற்கு 1 இன்ச் அளவிற்கு இஞ்சி துண்டு, 1/4 கப் புதினா இலைகள், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு பிளண்டரில் போட்டு நன்றாக பிளண்ட் செய்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கிளாஸ் எடுத்து அதில் நாம் அரைத்து வைத்த ஜூஸ் 2 டேபிள் ஸ்பூன் ஊற்ற வேண்டும். இதனுடன் 1/4 ஸ்பூன் பிளாக் சால்ட் மற்றும் 1/4 ஸ்பூன் வறுத்து பொடி செய்யப்பட்ட சீரகத்தை சேர்க்க வேண்டும். இவற்றுடன் அரை எலுமிச்சம் பழத்திலிருந்து சாறு எடுத்து சேர்த்து நன்றாக கலந்து விட்டால் எனர்ஜி ட்ரின்க் ரெடி.

இந்த பானம் புத்துணர்ச்சியை தருவதோடு சுறுசுறுப்பை நீக்கி உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய இஞ்சி சாறு டெஸ்டோஸ்டிரான் அளவை உயர்த்துகிறது. மேலும் எலுமிச்சை சாரிலிருந்து வைட்டமின் சி கிடைக்கிறது. இதே நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிர்காலத்தில் குடிக்க கூடிய அற்புதமான ஒரு எனர்ஜி ட்ரிங்க் இதுவாகும்.

Tags :
Energy drinkHealth tiphealthy lifeInstant activeRefreshing drink
Advertisement
Next Article