For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புற்று நோய் வராமல் தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..

ways-to-prevent-cancer
04:32 AM Nov 25, 2024 IST | Saranya
புற்று நோய் வராமல் தடுக்க முடியுமா  கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
Advertisement

சளி, காய்ச்சல் போன்று சாதாரணமான ஒரு நோயாக மாறியுள்ளது புற்றுநோய். ஆம், தற்போது உள்ள காலகட்டத்தில் அநேகர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய் பல வகைகளில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணங்களால் ஏற்படும். எல்லா வகை புற்று நோயையும் நம்மால் தடுக்க முடியாது. ஆனால், தினசரி வாழ்கையில் நாம் செய்யும் சின்ன மாற்றங்களால் பல வகையான புற்றுநோய்களை நாம் தடுக்க முடியும். இதற்க்கு முதலில், புற்றுநோயை ஏற்படுத்தும் முக்கிய காரணங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். மோசமான வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், புகையிலை நுகர்வு ஆகியவை தான் பெரும்பாலான புற்றுநோய்களுக்கு முக்கிய காரணம்.

Advertisement

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் சிகரெட், பீடி அல்லது குட்கா பயன்படுத்துகின்றனர். இதனால், வாய், நுரையீரல் மற்றும் தொண்டையில் புற்றுநோய் ஏற்படுகின்றது. மேலும், மது அருந்துவது பல வகையான புற்று நோய்களை ஏற்படுத்துகிறது. இதனால், இந்த இரண்டு பழக்கங்களையும் நாம் விட்டு விட்டால் பல வகையான புற்றுநோய்களையும் தவிர்க்கலாம். இந்த இரண்டு பழக்கங்களையும் விட அதிக பாதிப்பை ஏற்படுத்துவது மோசமான உணவு பழக்கம். இப்படி மோசமான உணவு பழக்கங்களால் ஏற்படும் புற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் கட்டாயம் பேக் செய்த உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான உணவு பழக்கங்களை பின்பற்றுங்கள்.

குறிப்பாக, ப்ரோக்கோலி, காலிஃபிளவர், பெர்ரி மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றும் திறன் கொண்டதால், புற்றுநோயைத் தடுக்க இந்த உணவுகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். மேலும், நாம் கண்ட உணவுகளை சாப்பிட்டு அதிக எடை இருந்தாலும், பல வகையான புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் முடிந்த வரை உடற்பயிற்சி செய்து அதிகப்படியான கொழுப்பை குறைத்து விடுங்கள். ஏனென்றால், எந்த அசைவும் இல்லாமல் இருப்பதும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. தோல் புற்றுநோய் தற்போது பலரை பாதிக்கிறது. அதனால் இந்த வகையான புற்றுநோயை தடுக்க, அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். நீங்கள் கட்டாயம் வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், ​​SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

Read more: ஒல்லியாக இருக்கும் உங்கள் குழந்தை புசுபுசுன்னு மாறனுமா??? அப்போ இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!

Tags :
Advertisement