For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னையின் அடையாளம்..!! உதயம் திரையரங்கம் தரைமட்டமாகிறது..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

10:21 AM Feb 15, 2024 IST | 1newsnationuser6
சென்னையின் அடையாளம்     உதயம் திரையரங்கம் தரைமட்டமாகிறது     அதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement

சென்னை என்றாலே கடல் முதல் கடைகள் வரை பல விஷயங்கள் நம் நினைவுக்கு வரும். அவை பெரும்பாலும் சென்னையின் அடையாளமாக மக்களின் மனதில் பதிந்தவை. அதே போல் சென்னையின் அடையாளமாக திகழ்ந்த தியேட்டர்கள் பல உள்ளன. படங்கள் முதல் பாடல்கள் வரை அந்த தியேட்டர்களின் பெயர்களை நாம் கேட்டிருப்போம். 90-களில் ரசிகர்களின் கொண்டாட்ட தலமாக நிகழ்ந்ததும் அந்த தியேட்டர்கள் தான்.

Advertisement

சென்னை திரையரங்குகள் என்று சொன்னாலே உதயம், தேவி, கமலா, ரோகிணி போன்ற திரையரங்குகளின் பெயர் தான் நம் நினைவுக்கு வரும். சென்னையில் அடையாளமாக திகழ்ந்த இடங்களில் உதயம் திரையரங்கம் மிகவும் பிரபலமானது. அசோக் நகரில் இருக்கும் இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரைகள் இயங்கி வந்தன. இந்த திரையரங்கம் 1983ஆம் ஆண்டில் 1.3 ஏக்கரில் கட்டப்பட்டது. ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பிரபலங்களின் படங்களை திரையிட்ட பெருமை உதயம் தியேட்டருக்கு உண்டு. கடந்த சில ஆண்டுகளாக அந்த திரையரங்கிற்கு ரசிகர்கள் வருவது குறைந்து விட்டது.

மேலும் திரையரங்கை மல்டிபிளக்ஸ் ஆகாமல் பழைய படியே படங்களை திரையிட்டு வந்தனர். இந்நிலையில், உதயம் திரையரங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை பிரபல கட்டுமான நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் 10 நாட்களுக்கு முன்பு கையெழுத்தானது. உதயம் திரையரங்கு இருக்கும் இடத்தில் பலமாடி அடுக்கு குடியிருப்பு வளாகம் கட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சாந்தி திரையரங்கம் மூடப்பட்டு அந்த இடத்தில் வேறு கட்டடம் கட்டப்பட்டு வியாபார அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது உதயம் திரையரங்கும் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது. விரைவில் திரையரங்கு இடிக்கப்படவுள்ளது.

Tags :
Advertisement