செந்தில் பாலாஜிக்கு சிக்கல்..!! ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு..!! மீண்டும் எப்போது..? சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!
Senthil Balaji | சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 11 மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் மீண்டும் ஜாமீன் வழங்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். இதனை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, வழக்கு மே 15ஆம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இன்று (மே 15) விசாரணை நடைபெற இருந்த நிலையில், வழக்கு நாளைய தினத்திற்கு (மே 16) ஒத்திவைக்கப்பட்டது.
Read More : Google Map-இல் இருக்கும் இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இவ்வளவு பயனுள்ளதா..?