For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடிக்கடி கருத்தடை மாத்திரைகளை உபயோகப்படுத்துறீங்களா.! உங்களுக்கு தான் இந்த செய்தி.!

03:30 PM Feb 12, 2024 IST | 1newsnationuser5
அடிக்கடி கருத்தடை மாத்திரைகளை உபயோகப்படுத்துறீங்களா   உங்களுக்கு தான் இந்த செய்தி
Advertisement

பொதுவாக நம் தாத்தா பாட்டி காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் 7, 8 குழந்தைகள் வரை பெற்றுக் கொண்டனர். தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பெருகிவரும் மக்கள் தொகையாலும், அதிகமான பண தேவையாலும் 1அல்லது2 குழந்தைகள் மட்டுமே பெற்று வளர்த்து வருகின்றனர். மேலும் திருமணத்திற்கு பிறகு பலரும் சரியான முன்னெச்சரிக்கைகள் எடுத்துக் கொள்வதில்லை.

Advertisement

இதனால் கர்ப்பம் அடைந்து கருவை கலைக்க முயல்கின்றனர். இதற்கு பலரும் மருத்துவரிடம் அறிவுரை பெறாமலே கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். இதனால் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். மேலும் கருத்தடை மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை குறித்து பார்க்கலாம்

  1. பெண்கள் கருத்தடை மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது எதிர்காலத்தில் குழந்தையின்மை பிரச்சனை ஏற்பட்டு செயற்கை முறையில் கருத்தரிக்கும் முறைகளை நாட வேண்டியது இருக்கும்.
  2. பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கு அடுத்ததாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வதும் ஒரு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  3. கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் சிறுநீரகத்தில் பக்க விளைவுகள் ஏற்பட்டு சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் உள்ளது.
  4. கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது ஹார்மோன்கள் பிரச்சனை ஏற்பட்டு உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
  5. கருத்தடை மாத்திரையினால் மாதத்தில் இரண்டு தடவை மாதவிடாய் ஏற்படுவதும் அல்லது மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உருவாகிறது. மேலே குறிப்பிட்ட பக்க விளைவுகள் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு அதிகம் ஏற்படுகின்றது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் முறையாக மருத்துவர்களிடம் சென்று அறிவுரை பெற்று முன்னெச்சரிக்கையாக இருப்பதன் மூலம் நோயிலிருந்தும் தேவையில்லாமல் கர்ப்பமாகுவதில் இருந்தும் பாதுகாக்கலாம்.
Tags :
Advertisement