சைனஸ் தொல்லையா.! தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு இதை செய்து பாருங்கள்.!?
தற்போதுள்ள மாசு நிறைந்த சுற்றுச்சூழலில் பலருக்கும் சைனஸ் தொல்லை அதிகரித்து உள்ளது. நம் முகத்தின் தோல்களுக்கு பின்னால் இருக்கும் எலும்பு பகுதியில் ஓட்டை போன்ற அமைப்பு இருக்கும். இதில் நீர் தேங்கி கொள்வதால் நமக்கு தும்மல், கண்களில் இருந்து நீர் வடிதல், தலைவலி, மூக்கில் அரிப்பு, முக வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு சைனஸ் தொல்லை உருவாகிறது.
மேலும் பலரும் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்வதால் நிரந்தர தீர்வு கிடைக்காமலும், பக்க விளைவுகளாலும் அவதியுருகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சைனஸ் தொல்லையை விரட்டலாம் என்று சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதைக் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
தேவையான பொருட்கள் :
மஞ்சள், அக்ரகாரம், சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, கருஞ்சீரகம், சித்திரத்தை, ஓமம், அதிமதுரம் (இந்த பொருட்கள் நாட்டு வைத்திய மருந்து கடைகளில் கிடைக்கும்)
செய்முறை :
மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் சம அளவு எடுத்துக் கொண்டு ஒரு கடாயில் நன்றாக வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். இதனை காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் சாப்பிடுவதற்கு முன்பாக தேனில் கலந்து சாப்பிடலாம். இதன் மூலம் பக்க விளைவுகளின்றி சைனஸ் தொல்லையை எளிதாக விரட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது.