For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்த தவறுகளை வீட்டில் செய்தால் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.! ஜோதிடத்தின் எச்சரிக்கை.!?

09:01 PM Feb 12, 2024 IST | 1newsnationuser5
இந்த தவறுகளை வீட்டில் செய்தால் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்   ஜோதிடத்தின் எச்சரிக்கை
Advertisement

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் வீட்டில் என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பதை குறித்தும், வாழ்க்கை முறையினை குறித்தும் கூறப்பட்டுள்ளது. நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் பலன்கள் நிச்சயம் உண்டு. இதன்படி வீட்டில் நாம் ஒரு சில தவறுகளை செய்யும்போது கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு துர்திஷ்டம் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் எச்சரிக்கையாக கூறப்பட்டு உள்ளது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்

Advertisement

  1. காலையில் எழுந்து குளிக்கும் போது தண்ணீர் அங்கும் எங்கும் அலை மோதாமல் குளிக்க வேண்டும். அவ்வாறு தண்ணீர் அலைமோத விட்டால் அன்றைய நாள் நாமும் அங்கும் இங்குமாக அலைய வேண்டியது வரும்.
  2. இரவில் தூங்கும் போது தலைக்கு வைக்கும் தலையணையை காலில் வைத்து படுக்கக் கூடாது. தலையணை மீது ஏறி அமர்வது துரதிஷ்டமாக கருதப்பட்டு வருகிறது.
  3. சாப்பிட உட்காரும்போது நிழல் நமக்கு முன் பக்கமாக விழும்படி உட்காரக் கூடாது. சாப்பாட்டில் நிழல் விழுந்து இருட்டடைய செய்வது வீட்டில் கஷ்டத்தை ஏற்படுத்தும்.
  4. சாப்பிடும்போது ஐந்து விரல்களில் ஒரு விரலை நீட்டியும், சாப்பாடு கீழே விழும்படி கையை உதறியும் சாப்பிடுவது நல்லதல்ல.
  5. சாப்பாடை உருண்டையாக செய்தோ அல்லது எச்சில் செய்து சாப்பிடுவது நல்லதல்ல.
  6. வாய் கொப்பளிக்கும் போது, எச்சில் துப்பும்போது வலது பக்கம் துப்ப கூடாது.
  7. சோறு, உப்பு, நெய் போன்றவற்றை கையால் பரிமாறுவது கூடாது.
  8. தாமிரம் மற்றும் வெண்கல பாத்திரங்களில் நீராகார பானங்களை வைக்க கூடாது.
  9. வெங்காயம், இஞ்சி, கட்டி தயிர், பாகற்காய் போன்றவற்றை இரவில் உண்ணக்கூடாது.
  10. இரு கைகளையும் சேர்த்து தண்ணீர் குடிக்க கூடாது.
    மேலே குறிப்பிட்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு சகல நன்மைகளும் உண்டாகும்.
Tags :
Advertisement