For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

துணைத் தலைவர் பதவியை என் பொண்டாட்டிக்கு விட்டுத்தர மாட்டியா..? மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து கொலை..!! நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு..!!

The court has sentenced two people to three life sentences in the case of murdering two people by mixing poison in alcohol.
08:55 AM Jan 21, 2025 IST | Chella
துணைத் தலைவர் பதவியை என் பொண்டாட்டிக்கு விட்டுத்தர மாட்டியா    மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து கொலை     நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
Advertisement

மதுவில் விஷம் கலந்து கொடுத்து 2 பேரைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

நாமக்கல் மாவட்டம் பரமத்தி இருகூர் ஊராட்சி சுப்பையாபாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு 50 வயது. இவர், அதே பகுதியைச் சேர்ந்த தியாகராஜன், செந்தில்குமார், தூய்மைப் பணியாளர் சரவணன் ஆகியோருடன் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மது அருந்தியுள்ளார். பின்னர் அனைவரும் அவரவர்கள் வீட்டிற்கு திரும்பிய நிலையில், தியாகராஜன், செந்தில்குமார் ஆகிய இருவருக்கு மட்டும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆசிட் கலந்த மதுவைக் குடித்ததால் இருவரும் உயிரிழந்தது தெரிய வந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், இருக்கூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவியை தனது மனைவிக்கு விட்டு தராததால், ஆத்திரமடைந்த ஆறுமுகம் ஆசிட் கலந்த மதுவை கொடுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த இருக்கூர் ஊராட்சி தூய்மைப் பணியாளர் சரவணனையும் பரமத்தி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் ஆறுமுகம், சரவணன் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆயுள் தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Read More : உயிரை காவு வாங்கிய சிக்கன்..!! இருவர் மரணம்..!! பலர் மருத்துவமனையில் அனுமதி..!! கோழியின் இந்த உறுப்பை சாப்பிட்டால் ஆபத்தா..?

Tags :
Advertisement