பெண்களே செம குட் நியூஸ்..!! உரிமைத்தொகை பணம் உயருகிறது..!! தமிழ்நாடு அரசு எடுக்கப் போகும் சூப்பர் முடிவு..!!
வரும் காலத்தில் மகளிர் உரிமை தொகையில் சில மாற்றங்களை செய்ய தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உரிமைத் தொகை ரூ. 2,500 ஆக வழங்கப்படும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பாஜக வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு ரூ. 1500 வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த திட்டத்திற்கு முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு அரசு, ரூ.1,000 மட்டுமே வழங்கி வருகிறது. தேர்தல் சமயத்தில் தமிழக அரசும் இதைப் பின்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஆளும் திமுக இந்த தொகையை ரூ.1,500 அல்லது ரூ.2,000ஆக உயர்த்த பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகலாம். அதிமுக, பாஜக, தவெக போன்ற கட்சிகள் தேர்தலில் கடும் போட்டி போடும் என்பதால் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகலாம்.