தந்தை பெயருக்கு பதில் கணவர் பெயர்..!! ஆதார் கார்டில் மாற்றுவது எப்படி..? ரொம்பவே ஈஸியான டிப்ஸ்..!!
இன்றைய சூழலில் வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு என அனைத்திற்கும் ஆதார் என்பது அவசியமாகிறது. ஆதாரின் 12 இலக்க எண் தான் ஒரு இந்திய குடிமகனின் ஆதாரமாகவே மாறி வருகிறது. இந்நிலையில், அதன் விவரங்களில் பிழை இருந்தால் எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்.
முக்கியமாக திருமணம் ஆன பெண்கள் தங்கள் ஆதார் தகவல்களை, தங்கள் தந்தை பெயருக்கு பதில் கணவன் பெயரை உள்ளிடுவதில் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எங்கே சென்று எப்படி மாற்றுவது என்று திணறி வருகின்றனர். கவலைப்படாதீங்க மக்கா.. அது ரொம்ப ஈஸி தான். திருமணமான பின்னர் தந்தை பெயருக்கு பதிலாக கணவர் பெயரை ஆன்லைன் வழியாகவும், மாற்றலாம். முழு விவரங்களையும் இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.
என்ன செய்ய வேண்டும்..?
* முதலில் உங்கள் ஆதார் அட்டையையும் உங்கள் திருமண சான்றிதழையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
* திருமண சான்றிதழை ஸ்கேன் செய்தோ அல்லது தெளிவாக படம் எடுத்தோ வைத்துக் கொள்ளுங்கள்.
* https://myaadhaar.uidai.gov.in/ என்ற ஆதாரின் இணைய தளத்திற்கு செல்லவும். அதில், உங்கள் ஆதார் எண் பதிவிடுங்கள்.
* ஆதாருடன் இணைக்கப்பட்ட எண்ணிற்கு OTP வரும். அதை உள்ளிட்டு உள்நுழையவும்.
* வலது மேல் ஓரத்தில் உங்கள் ஆதார் கணக்குடன் இணைத்த புகைப்படத்துடன் உங்கள் ஆதார் கணக்கு திறக்கும்.
* அதில் உங்கள் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், வீடு விலாசம், பிறந்த தேதி மாற்றும் தெரிவு இருக்கும். அதை க்ளிக் செய்யவும். * அதில் நீங்கள் எதை மாற்ற வேண்டும் என்ற விருப்பம் கேட்கும். அதில் பெயர் மாற்றமென்று கொடுத்து தந்தை பெயருக்கு பதிலாக கணவர் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்.
என்ன சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும்? உங்களது கணவர் இவர் என்று நிரூபிக்கும் சான்றுகள் குறிக்கும் திருமண பதிவு சான்றிதழை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணம் எவ்வளவு ஆகும்? பெயர் மாற்றத்திற்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
எப்படி அப்டேட்டுகளை பார்ப்பது? பின்னர் உங்கள் கோரிக்கைக்கான எண் தரப்படும். அதை வைத்து உங்கள் பெயர் மாற்றம் குறித்த அப்டேட்களை பார்த்துக்கொள்ளலாம்.
புதிய கார்டு எப்போது கிடைக்கும்? பெயர் மாற்றப்பட்ட புதிய ஆதார் கார்டு 90 நாட்களுக்குள் உங்கள் ஆதார் கார்டில் உள்ள முகவரிக்கு போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
நேரடியாக எப்படி மாற்றுவது? உங்களுடைய ஆதார் கார்டு, திருமண பதிவு சான்று, ஆகியவற்றின் நகல்களோடு அருகில் உள்ள இ-சேவை மையத்திலோ அல்லது ஆதார் சேவை மையத்திலோ விண்ணப்பிக்கலாம். அதற்கும் கட்டணம் 50 தான். இனி எப்படி பெயரை மாற்றுவது என்று தயங்காமல் எளிதாக மாற்றுங்கள்.
Read More : ’’16 பெற்று பெருவாழ்வு வாழ்க’’..!! அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க சொன்ன முதல்வர் ஸ்டாலின்..? உண்மை என்ன..?