இந்தியாவில் அதிகரிக்கும் 'கோஸ்ட் ஷாப்பிங் மால்' கதறும் மால் ஓனர்கள்..!! அதிரவைக்கும் உண்மைகள்!
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்றால், முன்பெல்லாம் ஒரு பெரிய லிஸ்ட் தயார் செய்து, பின்னர் கடைகளுக்குச் சென்று வாங்க வேண்டும். அதில் ஏதாவது ஒரு பொருளை குறிப்பிட மறந்துவிட்டால், மீண்டும் கடைக்கு அலைய வேண்டும். அதன்பிறகு ஷாப்பிங் மால்களின் வருகையால் கடைகளுக்கு ஒவ்வொரு முறையும் அலைய வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. ஒரே இடத்தில் மளிகைப் பொருட்கள், துணிமணிகள், பிள்ளைகளுக்கு பொழுதுபோக்கு என அனைத்தையும் ஷாப்பிங் மால்கள் கொடுத்ததால், வாராவாரம் குழந்தைகளுடன் போய் வருவதை வழக்கமாக்கி கொண்டார்கள் பெற்றோர்கள்.
இந்தியாவின் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஷாப்பிங் மால்கள் தற்போது மோசமான நிலைக்குச் சென்று வருவதாகச் சந்தை நிலவரம் கூறுகிறது. நாட்டின் ரீடைல் சந்தையின் முக்கிய பங்கு வகிக்கும் மால்கள் தற்போது கோஸ்ட் மால்களாக மாறி வருகிறது.
கோஸ்ட் மால் என்பது ஆட்கள் இல்லாமல், மக்கள் ஷாப்பிங் செய்ய வராமல் இருக்கும் மால்கள் தான் கோஸ்ட் மால்கள் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இப்படியும் இருக்கா என பலரும் ஆச்சரியப்படும் வகையில் இருந்தாலும் இதுதான் இன்றைய நிலைமை. . அதன்படி, இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் கோஸ்ட் மால்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, நைட் பிராங்க் இந்தியா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் வருகை குறைந்துவிட்டதால், ஒரு சில மால்கள் இடிக்கப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட வேறு சில பயன்பாடுகளுக்கு மாற்றப்பட்டாலும், பிற மால்கள் அனைத்தும் எப்படியாவது மக்களை ஈர்த்துவிட வேண்டும் என்று, பல கோடிகளை கொட்டி, புதுப்பொலிவாக்கப்படுகின்றன. ஆனால், அண்மை காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங்கில் மூழ்கி விட்ட மக்கள், ஷாப்பிங் மால்களை முன்பைப் போல இப்போது சீண்டுவதில்லை என்கிறது நைட் பிராங்க் இந்தியா அமைப்பு.
Read more ; பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்..? போலீசிடம் குஷ்பு சரமாரி கேள்வி..!!