பள்ளியில் துப்பாக்கிச்சூடு!… மாணவர் பலி!… 5 பேர் படுகாயம்!… தன்னைத்தானே சுட்டுக்கொண்டு 17வயது இளைஞர் தற்கொலை!
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான அயோவாவில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாணவர் ஒருவர் பலியாகினார்.
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான அயோவாவில் உயர்நிலை பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தநிலையில், வருடாந்திர குளிர்கால விடுமுறைக்கு பிறகு நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டு முதல் நாள் வகுப்புகளுக்கு மாணவர்கள் திரும்பினர். அப்போது, திடீரென 17 வயதுடைய அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடைத்திற்கு சென்ற போலீசார், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரித்தனர். அப்போது, இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய இளைஞரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பலியானது தெரியவந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.