For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பரபரப்பு..! மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச் சூடு! மீண்டும் கலவரமா?

02:02 PM Apr 19, 2024 IST | Mari Thangam
பரபரப்பு    மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச் சூடு  மீண்டும் கலவரமா
Advertisement

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல்கட்டமாக 21 மாநிலங்களில் நடந்து வரும் சூழலில், மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக துவங்கி இருக்கிறது. 7 கட்டங்களாக நடைப்பெறும் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் நடந்து வருகிறது. சுமார் 102 தொகுதிகளில் இந்த மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. பல மாநிலங்களில் விறு விறுப்பாக தேர்தல் நடந்து கொண்டுருக்கும் இந்த நிலையில், மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மணிப்பூரில் மிகப்பெரிய இனக்கலவரம் ஏற்பட்டு நாட்டையே உலுக்கியது. மணிப்பூர் மாநிலத்தில் இருக்கும் மெய்தி- குக்கி என இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையிலான இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை கலவரமாக மாறி சுமார் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், இந்த கலவரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

இந்த கலவரம் மணிப்பூரை மட்டுமின்றி இந்தியாவுக்கே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து தேர்தல் நடைபெற்று வரும் இந்த நிலையில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் உள் மற்றும் மணிப்பூர் வெளி என இரண்டு மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் உள் மணிப்பூர் மக்களவை தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.

ஏற்கனவே ஏற்பட்ட கலவரத்தினால் வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், எக்கச்சக்கமான காவலர்கள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். எனினும், இப்போது அங்கு துப்பாக்கிச்சூடு நடிந்திருக்கிறது. கிழக்கு இம்பால் பகுதியில் இருக்கும் தமன்போக்பி வாக்குச்சாவடியில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டு இருக்கிறது. இந்த துப்பாக்கிச்சூடில் சிக்கி மூன்று பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தல் நேரத்தில் கலவரம் ஏற்படக்கூடாது என முன் எச்சரிக்கையோடு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதிலும் இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மணிப்பூரில் இருக்கும் வெளி மணிப்பூர் தொகுதியின் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 26 நடக்கவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement