அதிர்ச்சி ரிப்போர்ட்: "வேகமெடுக்கு TB"… 2023-ல் இந்த மாநிலத்தில் மட்டும் 108 பேர் இறந்துள்ளனர்….!
இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் கடந்த ஆண்டு மட்டும் மொத்தமாக 108 பேர் காசநோயால் (TB ) பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அம்மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் 17,432 நபர்களின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் 2,272 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பபட்டது. இதில், 164 நோயாளிகள் பல மருந்து எதிர்ப்பு காசநோயால் (MDR-TB) அடையாளம் காணப்பட்டனர். 86% நோயாளிகள் வெற்றிகரமான சிகிச்சையைப் பெற்றாலும், 108 பேர் காசநோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பு ஆண்டு புள்ளிவிவரங்கள்: நடப்பு ஆண்டின் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில், சுகாதார அதிகாரிகள் 3,761 நபர்களின் மாதிரியை பரிசோதித்தில், 595 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 38 பேருக்கு MDR-TB இருப்பது உறுதி செய்யப்பட்டது, மேலும் 57 நபர்கள் TB மற்றும் HIV-AIDS இரண்டையும் எதிர்த்துப் போராடுவது கண்டறியப்பட்டது.
யாரெல்லாம் கசனிக்கு பாதிக்கப்படுகிறார்கள்: காசநோயாளிகளில், 6% நீரிழிவு நோயாளிகள், 33% புகையிலை பயன்படுத்துபவர்கள் மற்றும் 16% மது அருந்துபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது: மிசோரம் மாநிலத்தக்தில் இந்த ஆண்டு இதுவரை ஐஸ்வால் மாவட்டத்தில் 433 வழக்குகளும், கோலாசிப் மாவட்டத்தில் 46 வழக்குகளும்,, மற்றும் லுங்லேய் மாவட்டத்தில் 34 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதற்கு நேர்மாறாக, மேற்கு மிசோரமில் உள்ள மாமித் மாவட்டத்தில் ஐந்து வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.