For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது..!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

District Collector Bhaskara Pandian has announced that TASMAC shops will be closed for 3 days in observance of the Tiruvannamalai Deepamati festival.
08:07 AM Dec 10, 2024 IST | Chella
குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்     3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது     மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Advertisement

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், டிசம்பர் 13ஆம் தேதி மகாதீபம் ஏற்றும் வைபவம் நடைபெறுகிறது.

இதனையொட்டி, திருவண்ணாமலை நகரப்பகுதிக்கு அருகில் இயங்கி வரும் மணலூர்பேட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை, காமராஜர் சிலை அருகே திருமஞ்சனம் கோபுர வீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை, வசந்தம் நகர் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் ஆகிய 3 கடைகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகரப்பகுதியில் இயங்கி வரும் பார் வசதியுடன் கூடிய உரிமம் பெற்ற தனியார் ஹோட்டல்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி ஆகியவையும் மூட வேண்டும். மேற்சொன்ன அனைத்தும் டிசம்பர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 3 நாட்கள் செயல்படக்கூடாது” என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Read More : மாதம் ரூ.40,000 வரை சம்பளம்..!! POWERGRID ஆணையத்தில் வேலை..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

Tags :
Advertisement