அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய் காணாமல் போகும் மர்ம கோயில்.! எங்கு உள்ளது தெரியுமா.!?
பொதுவாக கோயில்கள் என்றாலே பல்வேறு அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்தது தான். அந்த வகையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள திருநீலக்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது நீலகண்டேஸ்வரர் கோயில். இக்கோயிலில் நிகழும் அதிசயத்தை காண்பதற்காகவே பக்தர்கள் பலரும் கோயிலுக்கு சென்று வருகின்றனர். அப்படி என்ன அதிசயம் என்பதை குறித்து பார்க்கலாம்?
பொதுவாக கடவுளுக்கு பால் அபிஷேகம், நீர் அபிஷேகம், தயிர், இளநீர், சந்தனம் போன்ற பல பொருட்களில் அபிஷேகம் நடப்பது கோயில்களில் சாதாரண ஒன்றுதான். அதேபோல் இந்த நீலகண்டேஸ்வரர் கோயிலிலும் கடவுளுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தில் பாத்திரம் பாத்திரமாக எண்ணெய் ஊற்றினாலும் எண்ணெய் இருந்த இடம் தெரியாமல் சிவலிங்கத்தால் உறிஞ்சப்படுகிறது.
இவ்வாறு அதிகமாக எண்ணெயை உறிஞ்சும் சிவலிங்கத்தை மறு நாள் மீண்டும் அபிஷேகம் செய்யும்போது முந்தைய நாள் அபிஷேகம் செய்த எண்ணெய் இருந்த இடம் தெரியாமல் வறண்டு போகிறது. பொதுவாக இந்த எண்ணெய் அபிஷேகம் செய்வது ஈசன் தொண்டையில் இருக்கும் விஷத்தன்மையை போக்குவதற்காக தான் செய்யப்பட்டு வருகிறது என்று இக்கோயிலில் நம்பப்பட்டு வருகிறது. இதனாலேயே அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய் முழுவதும் உரிஞ்சபடுகிறது என்று கூறி வருகின்றனர்.
மேலும் இக்கோயிலில் மற்றொரு சிறப்பாக கருதப்படுவது கோயிலின் உள்ளே உள்ள பலா மரத்தின் பழத்தை பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். ஆனால் ஈசனிற்கு பாதி பழத்தை படைத்து விட்டு மீதி பழம் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் கடவுளின் கோபத்திற்கு உள்ளாக நேரிடும் என்று நம்பப்பட்டு வருகிறது. ஐந்து இலைகளையுடைய வில்வமரம் அமைந்திருப்பது இந்த கோயிலில் மட்டும்தான் என்றும் கூறப்பட்டு வருகிறது.