அதிர்ச்சி..!! அருப்புக்கோட்டையில் மெத்தபெட்டமைன் தயாரிக்கும் ஆய்வகம்..? ரூ.16 கோடியாம்..!! அதிரவைக்கும் பின்னணி..!!
தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அவ்வப்போது மிகவும் ஆபத்தான, வீரியமிக்க மெத்தபெட்டமைன் எனும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்திய ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கார்த்திக், வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாதவரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.16 கோடி மதிப்பிலான 16 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஷாகுல் ஹமீது, லாரன்ஸ், சரத்குமார், ஜான்சி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக மெத்தபெட்டமைன் போதை பொருள் மாதவரத்தில்தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 17.8 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் முகாமிட்டு இதுவரை 10 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை மாதவரத்தில் கைப்பற்றப்பட்ட மெத்தபெட்டமைன் அருப்புக்கோட்டையில் ஒரு ஆய்வகத்தில் வைத்து தயாரிக்கப்பட்டதாம். மணிப்பூரில் இருந்த இந்த போதை பொருளை தயாரிப்பதற்கான மூல பொருட்கள் வாங்கியதாக தெரிகிறது.
Read More : ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவு..!! காலை உணவு ரொம்ப முக்கியம்..!! அதுவும் இப்படி சாப்பிடுங்க..!!