ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது..!! தலைவர் விஜய் அறிவிப்பு..!!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஈரோட்டில் தேர்தல் விதிகள் இப்போதே அமலுக்கு வந்துள்ளன. காவல்துறையினர் பாதுகாப்புகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பணப்பட்டுவாடா நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என விஜய் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத விஜய், இடைத்தேர்தலில் களமிறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தவெக போட்டியிடவில்லை. 2026ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு. அதை நோக்கி தனது கட்சியின் பயணம் இருப்பதாக விஜய் கூறியுள்ளார். இதனால், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக என 4 முனை போட்டி உருவாகியுள்ளது.
Read More : ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்..!! காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் ஈவிகேஎஸ் மகன் சஞ்சய் சம்பத்..?