அதிர்ச்சி தகவல்…! பெண்கள் உடல் எடை குறைவு மாத்திரை எடுத்துக்கொண்டால் எதிர்பாராத கர்ப்பம் ஏற்படும்..!
பெண்கள் உடல் எடை குறைவு மாத்திரை எடுத்துக்கொள்வதனால் கருத்தடை மாத்திரைகளை வேலை செய்யாமல் தடுக்கிறது. இதனால் தேவையற்ற கர்ப்பம் உருவாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல் பருமன் உள்ளவர்கள் கடுமையான உணவு கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, உடைபயிற்சி செய்து எடையை குறைப்பது ஆரோக்கியமானதாகும். ஆனால் தற்போதுள்ள மருத்துவ வளர்ச்சியினால் மாத்திரைகள், ஊசிகள் மூலம் எடையை குறைக்கின்றனர். பெண்கள் இதனை பயன்படுத்தும் போது இது கருவுருதல் வாய்ப்பை அதிகரிப்பதாக சமீபத்தில் சில தகவல்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. அவை உண்மைதானா? உடல் பருமனை குறைக்க மருந்து எடுத்தால் கர்ப்பம் தரிப்பார்களா? என்பது குறித்து .இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
உடல் பருமனைக் குறைப்பதன் மூலம் கருவுருதலுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்ய முடியும். pcos பிரச்சினை இருப்பவர்களாக இருந்தால் (கருப்பை நீர்க்கட்டி) மௌன்ஜாரோ (Mounjaro) போன்ற மருந்துகள் எடுக்கும்போது அவை, கருத்தடை மாத்திரை போல மிக மெதுவாகச் செயல்பட்டு, கருவளத்தைக் குறைக்கிறது. அதனால் தான் பிசிஓஎஸ் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் கருத்தரிப்பதில் பெரும் சிக்கலைச் சந்திக்கிறார்கள். Mounjaro மற்றும் Zepbound ஆகிய tirzepatide மாத்திரைகள் பிறப்புக் கட்டுப்பாட்டையும் ஊக்குவிக்கிறது. உடல் பருமனையும் குறைக்கும். ஆனால் இந்த மருந்துகளை உடல் மிக மெதுவாக உறிஞ்சும் தன்மையைக் கொண்டிருப்பதால் உங்களுக்கு திட்டமிடப்படாத கர்ப்பம் உண்டாகிறது.
ஆதலால் இந்த மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்கள், கர்ப்பம் தரிப்பதைத் தவிர்க்க நினைத்தால் அதற்கு மாத்திரை அல்லாத மற்ற காப்பர் டி , ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது நல்லது. அதன்மூலம் திட்டமிடப்டாத கர்ப்பத்தைத் தவிர்க்க முடியும்.