மிகவும் சூடான பானங்கள் புற்று நோய்க்கு வழிவகுக்கும்.. ஆய்வாளர்கள் ஷாக் ரிப்போர்ட்!
தொடர்ச்சியாக 60 டிகிரி செல்சியஸிற்கு மேலாக சூடான பானங்களை அருந்தினால் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிக சூடாக டீ, காஃபியை தொடர்ந்து குடித்தால் உடல் நலனில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியல் வெளியிட்டுள்ளது. சர்வதேச மெடிக்கல் ஜர்னலின் ஆய்வின் படி, எந்த ஒரு பானத்தையும் அதீத சூடாக அதாவது 60 டிகிரி செல்சியஸ் மேலான வெப்ப நிலையில் 700 மி.லிட்டருக்கும் மேலாக தினமும் அருந்தும் பட்சத்தில் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 90 சதவீதம் இருப்பதாக ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்ளது. உணவுக்குழாயில் செல்கள் அசாதாரண முறையில் கட்டுப்பாடு இன்றி வளரும் போது உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அதிக சூடான பானங்களின் பட்டியலில் தற்போது டீ, காஃபியும் அடங்கும் என்று உலக சுகாதார அமைப்பும் கூறியிருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் IARC எனப்படும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் அமைப்பு 10 நாடுகளில் இருந்து 23 விஞ்ஞானிகளுடன் இணைந்து அதிக சூடான பானத்திற்கும் கேன்சருக்கும் உண்டான தொடர்பு பற்றி ஆய்வு செய்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுகளை மதிப்பாய்வு செய்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், அதிக சூடாக அதிகப்படியாக டீ, காஃபி குடித்தால் நமது நாக்கில் உள்ள சுவை உணர்வுகளும் காட்டும் டேஸ்ட் பட்ஸ் பாதிக்கப்படக்கூடும். நமது நாக்கில் உள்ள மிகவும் சென்சிட்டிவ் ஆன டேஸ்ட் பட்ஸ்கள் சூடாக பானம் அருந்தும் போது பிற செல்களை போலவே பாதிப்பு அடையும் என்றும் தொடர்ந்து சூடான பானங்களை அருந்தும் போது நமது நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் நிரந்தரமாக பாதிப்பு அடையவும் வாய்ப்பு. உதடுகள் அதிக சூட்டால் பாதிக்கப்பட்டு கருமையாகக் கூட மாறும் என்றும் தொடர்ந்து அதிக சூடாக பானங்களை குடிப்பது நெஞ்சு எரிச்சலுக்கு வழி வகுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தினமும் 700 மில்லி மீட்டருக்கும் மேலாக 60 (140 டிகிரி பாரன்ஹீட்) டிகிரி செல்சியம் மற்றும் அதற்கும் மேலான வெப்பத்துடன் பானங்களை தொடர்ந்து அருந்தினால்தான் உணவுக்குழாய் புற்று நோய்க்கான ரிஸ்க் அதிகம் இருப்பதாக ஈரானை சேர்ந்த ஆய்வு தெரிவித்துள்ளது. தொடர் இருமல், அஜீரணம் அல்லது நெஞ்சு எரிச்சல், குரல் வளம் பாதிப்பு, உடல் எடை இழப்பு, பசி போதிய அளவு எடுக்காதது, உணவுக்குழாயில் இரத்தக் கசிவு உள்ளிட்டவைகளை உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும்.