For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Egg Price | நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..?

Egg prices in Namakkal have risen to an unprecedented level and have been set at 5 rupees 90 cents.
08:08 AM Dec 04, 2024 IST | Chella
egg price   நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு     எவ்வளவு தெரியுமா
Advertisement

நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து 5 ரூபாய் 90 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், நாமக்கல்லில் இருந்து முட்டைகள் மஸ்கட், துபாய், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நாள்தோறும் கொள்முதல் விலையை நிர்ணயித்து, வரத்து மற்றும் தேவையின் அடிப்படையில் முட்டையின் விலையை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில், தற்போது நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து 5 ரூபாய் 90 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டை கருத்தில் கொண்டு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Read More : மகளிர் உரிமைத்தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகை..!! பெண்களே ரூ.2,000 உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரப்போகுது..?

Tags :
Advertisement