'நீ ரொம்ப இன்னசென்ட் நண்பா’..!! ’கடவுளாக இனி உங்கள் குடும்பத்தை வழிநடத்துவீர்கள்’..!! சீரியல் நடிகர் நேத்ரன் மரணம் குறித்து உருக்கம்..!!
பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் திடீரென மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பொன்னி உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருப்பவர் யுவன்ராஜ் நேத்ரன். இவரது மனைவி தீபா முருகனும் பிரபல சீரியல் நடிகை தான். இவருக்கு அஞ்சனா மற்றும் அபிநயா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
நேத்திரனின் மூத்த மகள் அபிநயா தன்னுடைய தந்தையோடு சேர்ந்து சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தனர். தற்போது அபிநயா திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்காக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் சிகிச்சை பலனின்றி காலமானார் அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது திடீர் மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், நேத்ரனுடன் நடித்த ராஜ்கமல் வெளியிட்டுள்ள பதிவில், ”நான் மலைக்கு போயிட்டு வரேன்னு சொன்னேன்ல. என்னடா நீ. உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் நண்பா. உன்னுடைய சிரிப்பு.. நீ என்னை கவனிக்கிற விதம், உன்னுடைய சமையல், டான்ஸ் எல்லாத்தையும் மிஸ் பண்றேன். நீ ரொம்ப இன்னசென்ட்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதுபோல சீரியல் நடிகர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், ”நடிகர் யுவராஜ் நேத்ரன் அண்ணா மறைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. எங்கள் டீன் ஏஜ் பருவத்தில் இருந்து நாங்கள் அனைவரும் ஒன்றாக நிம்மதியாக இருப்போம் என்று நினைத்தேன். ஆனால், இனி நீங்கள் நிம்மதியாக இருங்கள். நீங்கள் இப்போது கடவுள். உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பீர்கள், பாதுகாத்து வழி நடத்துவீர்கள் என்று எனக்கு தெரியும். லவ் யூ, மிஸ் யூ அண்ணா" என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : மகளிர் உரிமைத்தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகை..!! பெண்களே ரூ.2,000 உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரப்போகுது..?