அதிர்ச்சி..!! விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது செருப்பு வீசி தாக்குதல்..!!
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அலைமோதிய மக்கள் கூட்டத்திற்கு இடையில் நெரிசலில் சிக்கி விஜயகாந்தின் உடலை பார்த்த விஜய், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். அருகில் இருந்த பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல் கூறினார். பொது இடங்களில் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத விஜய், முதன் முறையாக மிகவும் உணவர்ச்சிவசப்பட்டு அழுதது விஜயகாந்த் மீதுள்ள ஆழ்ந்த அன்பையும், மரியாதையும் வெளிப்படுத்தியது.
இந்நிலையில், விஜய் அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில் அவர் மீது செருப்பு எறிந்தது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதே போல் கூட்டத்தில் இருக்கும் சிலர் விஜய்யை பார்த்து போடா வெளிய என்று கூச்சலிட்டனர். இவை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படி செருப்பை தூக்கி வீசும் அளவிற்கு விஜய் மீது சிலர் அப்படி என்ன வன்மத்தை வைத்துள்ளார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர் இது தவறான செயல் என்றும் கூறியுள்ளனர்.