காலையிலேயே அதிர்ச்சி!. மதுரையில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!. அதிர்ஷ்டவசமாக உயர்தப்பிய பயணிகள்!
சென்னையில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையை யொட்டி மக்கள் அனைவரும் சொந்த ஊர் படையெடுத்து வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்கள், அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக பேருந்துகள், ரயில்களில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே இன்று காலை திடீரென தடம் புரண்டது. ரயில் என்ஜினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்று தடம் புரண்டதால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. மதுரை அருகே தடம் புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மீண்டும் ரயிலின் சக்கரத்தை தண்டவாளத்தில் ஏற்றும் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.
Readmore: அடுத்த 3 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை பெய்யும்!. 9 மாவட்டங்கள் லிஸ்ட் இதோ!. வானிலை அப்டேட்!