அதிர்ச்சி!. புகார் கொடுக்க சென்ற பெண்!. கழிவறைக்கு அழைத்து சென்று டிஎஸ்பி செய்த கேவலம்!. லீக்கான வீடியோ!.
DSP Video: கர்நாடகாவில் புகார் கொடுக்க காவலநிலையத்திற்கு சென்ற பெண்ணை கழிவறைக்கு அழைத்துச் சென்று டிஎஸ்பி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம், மதுகிரி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ராமச்சந்திரப்பா. இந்தநிலையில், பெண் ஒருவர் நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணை வலுகட்டாயமாக தனியாக அழைத்துக்கொண்டு டிஎஸ்பி ராமசந்திரப்பா கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனை காவல்நிலையத்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளையும், கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர். மேலும், காக்கிச்சட்டையிலேயே இதுபோன்ற கேவலமான சம்பவத்தில் ஈடுபட்ட டிஎஸ்பியிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. அசோக் உறுதியளித்துள்ளார்.
Readmore: உலகையே புரட்டிப்போட்ட கொரோனா தாக்கம்!. இன்றளவும் கொடிய வைரஸைப் பற்றி நமக்கு தெரியாத விஷங்கள் இதோ!.