நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்..! 55 ஆயிரத்தை கடந்த தங்கத்தின் விலை..! இன்றைய நிலவரம் என்ன..!
தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
அதற்கேற்ப கடந்த மாதம் ரூ.5,000 வரை தங்கம் விலையு குறைந்தது. ஆனால் தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்தவகையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் 6,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.55,040-க்கு விற்பனையாகிறது. அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.98.000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More: B.E முடித்த நபர்களுக்கு மாதம் ரூ.80,000 வரை ஊதியம்…! மத்திய அரசு நிறுவனத்தில் வேலை…!