ஷாக்!. நீங்க குப்புறபடுத்து தூங்குகிறீர்களா?. சீக்கிரம் வயசாகிவிடுமாம்!. இத்தனை பக்க விளைவுகளா?.
Sleep: தூக்கம் தூங்கும் முறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாறுபடலாம். குழந்தைகள் மல்லாந்து அல்லது குப்புறப்படுத்து தூங்குவார்கள். பெரியவர்கள் தங்கள் ஒருப்பக்கமாக படுத்து தூங்குவதை வழக்கமாக்கி கொள்கிறார்கள். இந்த ஒவ்வொரு முறை தூக்க நிலைக்கும் உள்ள நன்மைகள் மற்றும் சிக்கல்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
தூக்க நிலை களில் பக்கவிளைவுகளை அதிகம் கொண்டுள்ளவை குப்புறப்படுத்து தூங்குவதுதான். மிக அரிதாக சிலர் மட்டுமே இப்படி தூங்குவார்கள். வெகு சிலருக்கு மட்டுமே இந்த குப்புறப்படுப்பது விருப்பமானதாக இருக்கும். இந்நிலையில் தூங்கினால் கழுத்து, முதுகு மற்றூம் இடுப்பு வலி உண்டாகலாம். அதே நேரம் இது அமில ஃரிப்ளக்ஸ்களை மோசமாக்கும். இது குறட்டை மற்றும் மூச்சுத்திணறல் வாய்ப்பை குறைக்கலாம் என்றாலும் அது ஆபத்தை ஏற்படுத்தாது. எப்போதாவது என்றால் பரவாயில்லை. ஆனால் இதுதான் விருப்பம் என்றால் அது எதிர்காலத்தில் சிக்கல்களை உண்டு செய்யலாம்.
குப்புற படுத்து தூங்குவதினால் முகத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடை செய்யப்பட்டு சருமம் விரைவில் சுருக்கம் அடைந்து வயதான தோற்றத்தை உண்டாக்கிவிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். முதுகெலும்பு அருகில் இருக்கும் ரத்த குழாய்கள் இறுக்கமாகிவிடும். மேலும் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து ஆக்சிஜன் சப்ளை தடை செய்யப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இது போல் தூங்குவதால் ரத்தக்குழாய்களில் அடைப்பு கூட ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
குப்புறப்படுத்து தூங்குவதனால் மார்பு பகுதி இறுகி உடலுக்கு சரியான ஆக்ஸிஜன் கிடைக்காது. இவ்வாறு தொடர்ந்து தூங்கினால் நெஞ்சு வலி கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வயிற்றுப் பகுதியில் அதிகமாக அழுத்தம் கொடுப்பதால் செரிமான கோளாறு, அல்சர், வாயு தொந்தரவு இவைகளும் ஏற்படலாம். அத்துடன் கழுத்து மற்றும் தோள்பட்டை வலியையும் உண்டாக்கும். மேலும், தண்டுவட பாதிப்பை கூட ஏற்படுத்துகிறது அது மட்டுமல்லாமல் எலும்பு அடர்த்தி குறைய துவங்கும். இதய கோளாறு உள்ளவர்கள் கண்டிப்பாக குப்புறப்படுத்து தூங்கவே கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Readmore: காலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா?. நோட்டிபிகேஷனால் ஏற்படும் ஆபத்து!. நிபுணர்கள் எச்சரிக்கை!