அதிர்ச்சி!… தேங்காய் தண்ணீரை நேரடியாக குடிக்காதீர்கள்!… கோமா நிலைக்கு சென்ற முதியவர்!
Coconut Water: டென்மார்க்கைச் சேர்ந்த 69 வயது முதியவர் கெட்டுப்போன தேங்காய்த் தண்ணீரைக் குடித்ததால் கோமா நிலைக்கு சென்று உடல் உறுப்புகள் செயலிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரியனின் தாக்கத்தால் வெயில் உக்கிரமாக இருக்கிறது. இந்த நேரத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். உடலில் வெப்பம் அதிகமாக இருந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். இந்த கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள மக்கள், இளநீர், ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்களை நாடி செல்கின்றனர். அந்தவகையில், கோடை வெயிலுக்கு தேங்காய் தண்ணீர் குடிப்பது நல்லது. இதனை தினமும் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பதால், ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் ஸ்ட்ரா போட்டுக் குடிக்கின்றனர்.
அப்படி செய்வது தவறு. ஏனென்றால் உடல்நல கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். தேங்காயில் இருந்து தேங்காய் தண்ணீரை நேரடியாக குடிக்க வேண்டாம். தேங்காய் தண்ணீரை குடிப்பதற்கு முன் எப்போதும் தேங்காயின் உட்புறத்தை சரிபார்த்து கொள்ளவேண்டும். ஏனென்றால், டென்மார்க்கைச் சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் கெட்டுப்போன தேங்காய்த் தண்ணீரைக் குடித்ததால் கோமா நிலைக்குச் சென்று உடல் உறுப்புகள் செயலிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, முன்பே திறந்திருந்த தேங்காயில் இருந்து தேங்காய்த் தண்ணீரை நேரடியாகக் குடித்துவிட்டு அது அழுகியிருப்பதை சிறிது நேரம் கழித்து உணர்ந்துள்ளார். எனவே, பழைய தேங்காய் தண்ணீர் ஆபத்தான பூஞ்சையை உருவாக்கலாம் மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம் என்ற கூறப்படுகிறது.
Readmore: அட்சய திருதியை அன்று பூஜை அறையில் செய்ய வேண்டியவை..!! என்ன பொருட்கள் வாங்கலாம்..?