ஷாக்!. ஆண்களை தாக்கும் அபாயகரமான நோய்கள்!. உடல் பருமனால் இதயத்தில் ஏற்படும் அழுத்தம்!.
Obesity: ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.8 மில்லியன் மக்கள் அதிக எடை அல்லது உடல் பருமனால் ஏற்படும் நோய்களால் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய ஆண்களில் பலர் உடல் பருமன் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களுக்கு உடல் பருமனால் ஏற்படக்கூடிய 5 நோய்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் பருமனுடன் சேர்ந்து அதிகமாகும் தொப்பை கொழுப்பு ஆண்களுக்கு எலும்பு நோய்கள் ஏற்பட காரணமாகின்றது. உடல் பருமனாக உள்ள பல ஆண்கள், கைகள் மற்றும் கால்களின் எலும்புகளில் வலியால் சிரமப்படுகிறார்கள். சில ஆண்களுக்கு முழங்கால் வலி, இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் இருக்கும். உடல் பருமனால் கீல்வாதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.
உடல் பருமனால் பாதிக்கப்பட்ட பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில், உடல் பருமன் காரணமாக, 27 சதவீத ஆண்களுக்கு நீரிழிவு நோய் வரும் அபாயம் உள்ளது. உடல் உப்பசத்தால், உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. எடையைக் குறைப்பதால், இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம்.
சமீப காலங்களில் இதய நோய்களுக்கான அபாயம் அதிகரித்து வருகிறது. மாரடைப்பு போன்ற அபாயகரமான இதய நோய்கள் ஆண்களுக்கு உடல் பருமனால் ஏற்படலாம். 40க்கு மேல் பிஎம்ஐ உள்ள ஆண்களுக்கு இதய நோய் மிகவும் பொதுவானது. இருப்பினும், இவை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆகையால், எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். ஆண்களில் உடல் எடை அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்த அபாயம் ஏற்படும் சாத்தியமும் அதிகரிக்கிறது. வயிறு வளரும் போது, ஆண்களின் இதயத்தில் அழுத்தம் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று, பெரிதாகும் புரோஸ்டேட். இது தீங்கற்ற புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளேசியா மற்றும் பிபிஹெச் என்றும் அழைக்கப்படுகிறது. 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் புரோஸ்டேட் விரிவாக்கம் பற்றிய புகார்கள் வருவது இந்த நாட்களில் சகஜமாகி விட்டது. 51 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்களில் 50 சதவீதத்தினருக்கும், 80 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 90 சதவீதத்தினருக்கும் இந்நிலை காணப்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், உடல் பருமன் ஆண்களில் புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளேசியாவின் அபாயத்தை அதிகரிக்கிறது.
Readmore: இதை உணவில் சேர்த்துக் கொண்டால், குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்!. ஆய்வில் தகவல்!