ஒருநாளில் ஒரு மில்லியன் பேருக்கு பாலியல் தொற்று!. WHO எச்சரிக்கை!. பாதுகாப்பான உடலுறவுக்கு டிப்ஸ்!
Sex: ஒருநாளில் ஒரு மில்லியன் பேருக்கு பாலியல் நோய் தொற்றுகள் உருவாகிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இதனை தவிர்க்க சில டிப்ஸ் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கைப்படி, ஒருநாளில் ஒரு மில்லியன் பேருக்கு பாலியல் நோய் தொற்றுகள் உருவாகிறது என்று கூறுகிறது. அதில் சைஃபிள்ஸ், கோனோரியா, க்லமீடியா, டிரைகோமோனியாசிஸ் இவைதான் முக்கியமானவை. உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் தொற்றுநோய்கள் பாலியல் நோய் தொற்றுகளாகும். இதில் சிலவகை தொற்றுநோய்களுக்கு சிகிச்சை உண்டு. சிலவற்றிற்கு சிகிச்சை கிடையாது. இவை கடுமையான பின்விளைவுகளை பிற்காலத்தில் ஏற்படுத்தலாம். பாலியல் தொற்றுநோயின் நீண்ட கால பாதிப்புகள் கடுமையானதாக இருக்கலாம்.
இவை இனப்பெருக்கம் மற்றும் பாலியல் தொடர்பானதாக இருக்கலாம். எனவே நீங்கள் தொடர் பாலியல் உறவுகளில் ஈடுபட துவங்கியவுடன் பாலியல் நோய் தொற்றுகள் அவை கொண்டு வரும் தீவிர விளைவுகள் குறித்து தெரிந்துகொள்வது நல்லது. அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து அறிந்துகொள்வது அவசியமாகிறது.
பாலியல் தொற்று உங்கள் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். அது மேலே குறிப்பிட்ட பாலியல் தொற்று நோய்களுடன் ஹெச்.ஐ.வி உள்ளிட்ட வைரஸ் தொற்றுநோய்களையும் ஏற்படுத்துகிறது. இவை சில எடுத்துக்காட்டுகளாகும். எனவே இவற்றை நாம் தவிர்ப்பதில் அக்கறை செலுத்துவது அவசியமாகிறது.
காண்டம்கள் அல்லது மற்ற பரிசோதிக்கப்பட்ட பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துவது சிறந்தது. இது பாலியல் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கிறது. உங்களுக்கு காண்டம் அலர்ஜியை ஏற்படுத்தும் என்றால், வேறு வழிகளும் உள்ளன. இவையும் மலிவான விலைக்கே கிடைக்கும். ஆனால் அதை நீங்கள் பயன்படுத்தி பாதுகாப்பான உடலுறவு கொள்ள வேண்டும்.
ஒரு நபருடன் மட்டுமே பாலியல் தொடர்பு வைத்துக்ககொள்ள வேண்டும். பல நபர்களுடன் வைத்துக்கொள்ளும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் ஏற்படுகிறது. பாலியல் உறவில் ஈடுபடும்போது முன்னரும், பின்னரும் உங்கள் பாலுறுப்புகளை சுத்தமாக கழுவவேண்டியது அவசியம். அவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லையென்றாலும் பாலியல் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
நீங்கள் அதிகமாக உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்றால், அடிக்கடி பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம். அது உங்களுக்கு கூடுதல் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. புதிதாக ஒரு நபருடன் உடலுறவில் ஈடுபடும்போது, அவரிடம் நீங்கள் உங்களுக்கு பாலியல் தொற்றுநோய்கள் ஏதேனும் உள்ளதா என்பதை அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். அவர்களுக்கும் உள்ளதா என்பதை தெரிந்துகொண்டு தொடருங்கள். நீங்கள் இதை வெளிப்படையாக பேசுவதும் உங்களுக்கு பாலியல் தொற்நோய் அதிகம் பரவாமல் தடுக்க உதவுகிறது.
ஓரல் செக்ஸ் மூலம் உங்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படலாம். எனவே அதை தடுக்கவும் ஓரல் செக்ஸின்போதும் காண்டம்களை பயன்படுத்துங்கள். பல் சுத்தத்தை பேணுவதுடன் அடிக்கடி பரிசோதனை செய்துகொள்ளுங்கள். செக்ஸ் டாய்ஸ் போன்றவற்றை பயன்படுத்தினீர்கள் என்றால் அவற்றை பகிர்ந்துகொள்ளாதீர்கள். அவற்றின் மூலமும் பாலியல் தொற்றுகள் பரவும்.
நீங்கள் பாதிக்கப்படும் நபராக இருந்தீர்கள் என்றால் தயவு செய்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுங்கள். ஹெச்பிவி போன்ற தடுப்பூசிகள் உங்களுக்கு உதவும். இவை உங்களை பாலியல் நோய் தொற்றுகளிடம் இருந்து பாதுகாக்கும். மேலும் அந்த இடத்தில் தடிப்புகள், அரிப்புகள், காயங்கள் இருந்தால், உங்களிடமோ அல்லது உங்கள் இணையரிடமோ இருந்தால் உடலுறவு கொள்வதை தவிர்த்தல் நலம்.
Readmore: குட்நியூஸ்!. ஜூலை 31க்கு பிறகு ஐடிஆர் தாக்கல் செய்தால் அபராதம் இல்லை!