முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பணியிடத்தில் பாலியல் தொல்லையா? பயம் வேண்டாம்.. இதை செய்தால் போதும்..!!

Sexual harassment in the workplace? Don't be afraid.. Just do this
07:32 AM Oct 12, 2024 IST | Mari Thangam
Advertisement

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேறி வருகின்றனர். உண்மையில் இது பாசிட்டிவான விஷயமாக இருந்தாலும் கூட பெண்கள் சில துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.

Advertisement

பேருந்து, ரயில் என பயணிக்கும் இடம் தொங்கி பணியிடம் வரை பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடக்கின்றன. ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இது போன்ற ஏராளமான கதைகள் இருக்கும். இதையெல்லாம் வெளியே சொன்னால் என்ன நடக்கும் என்ற பயத்திலேயே பலரும் வாய்திறப்பதில்லை. அதையும் தாண்டி ஒரு தைரியத்தை வளர்த்துக் கொண்டு புகார் அளித்தால், மறைமுகமாக அப்பெண் வேலையை விட்டு நீக்கப்படுவதற்கான அனைத்து வேலைகளும் நடைபெறும்.

இதனாலையே பல பெண்கள் அலுவலகத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களையும், சீண்டல்களையும் வெளியே யாரிடமும் சொல்லாமல் புகார் கொடுக்காமல் அமைதியாக இருக்கின்றனர். என்ன செய்தாலும் பெண்கள் இதைப் பற்றி வெளியில் சொல்ல மாட்டார்கள் என்ற மறைமுக தைரியம் இது போன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு கிடைத்து விடுகிறது என்பதால், அலுவலகத்தில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, வேலை செய்யும் இடமே பாதுகாப்பற்ற சூழலாக இருக்கிறது.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மட்டுமல்லாமல், பாலியல் ரீதியான பாகுபாடு, பாலியல் சார்ந்த வேலை கிண்டலுக்கு உள்ளாவது உள்ளிட்ட பிரச்சனைகளையும் தெரிவிக்க வேண்டும். இதைப் பற்றிய விவரங்களை சென்னை பெருநகரக் காவல் துறை வெளியிட்டுள்ளது. பணியிடத்தில் பாலியல் தொல்லையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு சட்டமே இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், நீங்கள் அதுபோன்ற தொந்தரவுகளை எதிர் கொண்டால் உடனடியாக பின்வரும் எண்ணில் அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிப்பது அவசியம்.

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சீண்டலுக்கு உட்பட்டு இருந்தால் உடனடியாக 181 என்ற உதவி எண்ணை அழைத்து விவரங்களை தெரிவிக்கலாம். அல்லது, https://shebox.wcd.gov.in/ என்ற வலைதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.

Read more ; பம்பு செட் குளியல் முதல் மாட்டு வண்டி சவாரி வரை.. சென்னையில் ஒரு கிராம வாழ்க்கை..!! வீக்கெண்ட் ட்ரிப் போக பெஸ்ட் ஸ்பாட்… 

Tags :
sexual harassmentworkplace
Advertisement
Next Article