முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாலியல் வழக்கு..!! வாதங்களை முன்வைக்கவில்லை என்றால் பிப்.3ஆம் தேதி தீர்ப்பு..!! ராஜேஷ் தாஸுக்கு நீதிபதி எச்சரிக்கை..!!

04:17 PM Jan 29, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வரும் 31ஆம் தேதி இறுதி வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கில் போதுமான முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, ராஜேஸ் தாஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே, கடந்த புதன்கிழமை விழுப்புரம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வருகிற 29ஆம் தேதி (இன்று) ராஜேஷ் தாஸ் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி பூர்ணிமா தெரிவித்திருந்தார்.

அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில்  ஆஜரானார். அப்போது, ஜனவரி 31ஆம் தேதி ராஜேஷ் தாஸ் தரப்பினர் இறுதி வாதங்களை முன் வைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் பிப்ரவரி 3ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி பூர்ணிமா எச்சரித்தார்.

Tags :
நீதிபதி எச்சரிக்கைபெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லைமுன்னாள் சிறப்பு டிஜிபிராஜேஷ் தாஸ்விழுப்புரம் நீதிமன்றம்
Advertisement
Next Article