தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை..!
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் மாணவர்களுக்கு உதவித்தொகை உடன் கூடிய ஓர் ஆண்டு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்தில் புதியதாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் (Govt ITI) தோற்றுவிக்கப்பட்டு தற்சமயம் Textile Mechatronics, Mechanic Electric Vehicle, Central Air Condition Plant Mechanic தொழிற்பிரிவுகளும், Health Sanitary Inspector, எனும் ஓராண்டுகால தொழிற்பிரிவும் தொடங்கப்பட்டு மாநில தொழில் குழும கல்வி (SCVT) முறையில் 2024- 2025 ம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை வருகின்ற 31.12.2024 வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சிக்கு 10 ஆம் வகுப்பு கல்வித்தகுதி பெற்று தேர்ச்சி பெற்ற ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு குறைந்தபட்சம் 14 வயது முதல் 40 வயது ஆகும். மகளிருக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்ப கட்டணம் ரூ.50/- மற்றும் சேர்க்கை கட்டணம் ரூ.195/- ரூபாய் மட்டும் சேர்க்கையின்போது நேரடியாக செலுத்தவேண்டும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி காலத்தின் பொழுது; பிரதி மாதம் ரூ.750 க்கான கல்வி உதவித்தொகை, விலையில்லா சீருடை, விலையில்லா பாடபுத்தகம் மற்றும் வரைபடக்கருவிகள், விலையில்லா காலணி -1ஜோடி, விலையில்லா மிதிவண்டி, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை, தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை, கட்டணமில்லா அரசு போக்குவரத்து வசதி ஆகியவை தமிழ்நாடு அரசின் சலுகைகள் பெறலாம்.
எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு 10- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தகுதியுள்ள மாணவ /மாணவியர்கள் மாவட்ட ஆட்சியரகம், நாமக்கல் வளாகத்தின் மூன்றாம் தளத்தில் உள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக அறை எண் 304 ல் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி சேர்க்கை உதவி மையத்திற்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (10th Mark Sheet), இறுதியாக பெற்ற மாற்று சான்றிதழ் (Transfer Certificate), சாதி சான்றிதழ் (Community Certificate) ஆகிய அசல் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் (Pass Port Size Colour Photo) மற்றும் ஆதார் அட்டையுடன் (Aadhar Card) நேரில் சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.