முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரித்வி ஷா மீதான பாலியல் குற்றச்சாட்டு: விசாரிக்க மும்பை கோர்ட் உத்தரவு

03:05 PM Apr 04, 2024 IST | Mari Thangam
Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீதான பாலியல் குற்றச்சாட்டு புகாரை விசாரிக்க மும்பை நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

டி-20 கிரிக்கெட் இந்தியாவில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் இந்திய வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சமூக வலைதள பிரபலமான யூடியூபர் சப்னா கில்லுடன் மோதலில் ஈடுப்பட்டு சர்ச்சையில் சிக்கினார்.

அதனைத் தொடர்ந்து, சப்னா கில் தன்னிடம் பிரித்வி ஷா தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்றும் மானபங்கம் செய்தார் என்றும் குற்றம் சாட்டினார். சப்னா கில் மும்பை அந்தேரி மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அளித்த கிரிமினல் குற்றச்சாட்டு புகாரைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர் ஆஷ்ஷ் சுரேந்திர யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்  பிரித்வி ஷா மீதான பாலியல் குற்றச்சாட்டு புகார்களை விசாரிக்க மும்பை நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 19 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், காவல்துறைக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யாததற்காக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய சப்னா கில் மனுவை நிராகரித்து மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் எஸ்.சி. தெய்ட் உத்தரவிட்டார். 

Tags :
cricketermumbai courtprithvi shah
Advertisement
Next Article