சென்னைக்கு மீண்டும் தீவிர மழை எச்சரிக்கை..!! டெல்டா மாவட்டங்களுக்கு ஆபத்து..!! வானிலை மையம் வார்னிங்..!!
தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில், ஃபெஞ்சல் புயல் உருவாகி, பரவலாக மழையை கொடுத்தன. அதாவது, வரும் கோடையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாதவாறு மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், மார்கழி மாத குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது.
இந்நிலையில், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தம், வரும் 23 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மழை தீவிரமடையும் என சொல்லப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னையில் நேற்று மழையில்லாமல் இருந்த நிலையில், இன்று அதிகாலை முதலே லேசான மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இது இன்று வடமேற்கு திசையில் வடதமிழக - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில் ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.
அதைத்தொடர்ந்து வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. 23ஆம் தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும். அதனைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக மழையை கொடுத்து சென்றே அரபிக்கடல் பகுதியில் இந்த தாழ்வுப் பகுதி வலு இழக்க இருக்கிறது.
Read More : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்…! ஆளுநர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு…