மாணவர்கள் கவனத்திற்கு... நாளை இவர்களுக்கு மட்டும் அரையாண்டு தேர்வு நடத்த வேண்டும்...!
கனமழையால் ஒத்தி வைக்கப்பட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வை நாளை நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் டிச.12-ம் தேதி மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கனமழையால் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.12-ம் தேதி பல மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவில்லை. அந்த நாளில் நடைபெறாத பாடத் தேர்வுகள் நாளை நடத்த வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரியப்படுத்த வேண்டும்.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘‘கனமழையால் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.12-ம் தேதி பல மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவில்லை. அந்த நாளில் நடைபெறாத பாடத் தேர்வுகள் நாளை நடத்த வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.