”கையில ஒயின் பாட்டில்”..!! ”புருஷன் இல்லாத நேரம் பார்த்து”..!! விஷாலை இப்படி பாக்குறதுல ரொம்ப சந்தோஷம்..!! பரபரப்பை கிளப்பிய சுச்சி..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஷால். இவர், தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடித்துள்ள ”மதகத ராஜா” திரைப்படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இதில் விஷால் கை நடுக்கத்துடனும், பேச்சில் தடுமாற்றத்துடனும் காணப்பட்டார்.
அவரை படக்குழுவினர் கைத்தாங்கலாக பிடித்து சேரில் அமர வைத்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்த நிலையில், பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். இதற்கிடையே, அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், காய்ச்சலுடனே ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
மேலும், நடிகர் விஷால் அவன் இவன் படத்தில் நடித்த போது மாறுகண் இருப்பது போல நடித்திருந்தார். அப்போதில் இருந்தே அவருடைய கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. இதனால் ஸ்டீராய்டு போன்ற சிகிச்சைகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்ததால், தலைமுடி கொட்டி இப்படி கை நடுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஷாலின் இந்த நிலை தனக்கு சந்தோஷத்தை தருவதாக பாடகி சுசித்ரா கருத்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு வீடியோ வைவெளியிட்டுள்ளார். அதில், "ரசிகர்கள் எல்லாம் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறீர்கள். நீங்க எல்லாம் விஷாலுக்காக பரிதாபப்படும் இந்த நேரத்துல நான் அவரப்பத்தி சில விஷயங்கள் சொல்லப் போகிறேன்.
கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. கார்த்திக் குமார்ன்னு ஒரு கழுதை புருஷன்னு சொல்லி வீட்ல உக்காந்து இருக்கும். அது அப்பப்போ எங்க போகும்னே தெரியாது. ஒருநாள் அந்த கழுதை வீட்ல இல்லாதப்போ வீட்டோட காலிங் பெல் அடிக்குது. நான் போய் கதவ தொறந்து பாத்தா விஷால் நிக்குறான். அவன் கண்ணு, பல்லு எல்லாம் மஞ்சள் கலர்ல இருக்கு. அவன் கைல வேற ஒரு ஒயின் பாட்டில் இருக்கு. அப்போ கார்த்திக் இல்லையான்னு கேட்டான். நான் இல்லன்னு சொல்லிட்டேன். அப்புறம் என்கிட்ட நான் வீட்டுக்குள்ள வரலாமான்னு கேக்குறான்.
நான் முடியாதுன்னு சொன்னேன். அப்போ நான் இந்த ஒயின் பாட்டில கார்த்திக் குமாருக்கு கொடுக்க வந்தேன்னு சொன்னான். நான் அவன் கௌதம் மேனன் ஆபிஸ்ல இருக்கான், போய் பாருங்கன்னு சொன்னேன். அப்புறம் நான் அவனை திட்டினேன். இது விஷால் காதுல விழுந்துடுச்சி. என்னன்னு கேட்டப்போ எங்க வீட்டுக்கு வர பூனைய சொன்னேன்னு சொன்னேன். இதுதான் உங்க விஷால். அவருக்காக தான் நீங்க எல்லாம் வேண்டிக்குறீங்க. ஆனா, அன்னைக்கு ஒயின் பாட்டில் புடிச்சிட்டு இருந்த கை தான் இன்னைக்கு நடுங்குது. எனக்கு ரொம்ப சந்தோஷம் இப்படி பாக்குறதுக்கு" என்று பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Read More : ”கூடவே சுத்திட்டு இருந்தியே செவ்வாழ”..!! நண்பனுக்கு வைத்த பயங்கர ட்விஸ்ட்..!! மனைவியுடன் ஒரே ஓட்டம்..!!