முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

“செந்தில் பாலாஜி ஒத்துழைப்பதில்லை” - அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்த ED..!

07:14 AM Apr 26, 2024 IST | Baskar
Advertisement

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

Advertisement

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில், ‛‛சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்.

வழக்கை 3 மாதங்களில் முடிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. போதிய காரணங்கள் ஏதுமில்லாமல் தாக்கல் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என அமலாக்கத்துறை தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்த நிலையில், விசாரணையை ஜூன் 21ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 35வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More: ஐபோன் பயனர்களுக்கு பாஸ் கீ அம்சத்தை அறிமுகப்படுத்திய WhatsApp.!! இதை பயன்படுத்துவது எப்படி.?

Advertisement
Next Article