For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை 4 மாதத்தில் முடிக்க உத்தரவு..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

The Madras High Court has given four months time to the Madras Principal Sessions Court to complete the investigation of the illegal money transfer case against Senthil Balaji in 4 months.
01:58 PM Jun 26, 2024 IST | Chella
செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை 4 மாதத்தில் முடிக்க உத்தரவு     சென்னை ஐகோர்ட் அதிரடி
Advertisement

செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு நான்கு மாத அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

திமுக முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் சிறையில் உள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது வேலைவாங்கித் தருவதாக பணம் பெற்று ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் 2023ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது. தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் கூட சோதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஜூன் 14ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி பலமுறை மனு அளித்த நிலையிலும், அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு நான்கு மாத அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கை 3 மாதங்களில் முடிக்க கடந்த பிப்ரவரியில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : முத்தம் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா..? அதுவும் இந்த நேரத்தில்..!! நீங்களும் மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement