செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை... இன்று காலை 10.30 மணிக்கு நேரம் குறித்த உச்ச நீதிமன்றம்...!
செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கோரிய மனுவை, இன்று காலை 10.30 மணிக்கு விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, வங்கி தொடர்பான விடுபட்ட ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில்தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தும், கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் கவரிங்லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்புக்கு வழங்கவும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளிவைக்கக் கோரிய மனுவில், செந்தில் பாலாஜி தரப்பு வாதத்துக்காக வழக்கு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கோரிய மனுவை, இன்று காலை 10.30 மணிக்கு விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஜாமின் கோரியுள்ள அவரது மனுவை, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு விசாரணை செய்ய உள்ளது. அவருக்கு ஜாமின் கிடைக்குமா.? என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.