Share Market Today : தேர்தல் முடிவுக்குப் பிறகு மீண்டெழுந்த இந்தியப் பங்குச் சந்தை!! சென்செக்ஸ், நிப்டி உயர்வு!
தேர்தல் முடிவுக்குப் பிறகு மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று மீண்டும் உயர்வுப்பாதைக்குத் திரும்பின.
கடந்த சனிக்கிழமை மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 150 இடங்கள் வரையிலேயே வெல்லும் என்றும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இதையடுத்து நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை பங்குச் சந்தை உச்சம்தொட்டது. சென்செக்ஸ் 2,507 புள்ளிகள்உயர்ந்து 76,469 ஆகவும், நிஃப்டி 733 புள்ளிகள் உயர்ந்து 23,264 ஆகவும் நிலைகொண்டன.
ஆனால், நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டதற்கு மாறாக காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றது.அதேபோல், பாஜக எதிர்பார்க்கப்பட்டஎண்ணிக்கையில் வெல்லவில்லை. இதையடுத்து பங்குச் சந்தைமளமளவென சரிய ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் சென்செக்ஸ் 6,100 புள்ளிகள் வரை சரிந்தது.
பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்றது உறுதியான பிறகு சற்று ஏற்றம் கண்டது. எனினும் ஒட்டுமொத்த அளவில் நேற்று பங்குச் சந்தை 5.74 சதவீதம் சரிந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று புதன்கிழமை (05-06-2024) மீண்டும் உயர்வுப்பாதைக்குத் திரும்பின. நேற்று தேர்தல் முடிவுகள் பதற்றம் காரணமாக அனைத்துக் குறியீடுகளும் கடும் சரிவு கண்ட நிலையில், இன்று சென்செக்ஸ், நிப்டி மீண்டெழுந்தது
காலை 11:20 மணியளவில் சென்செக்ஸ் 1,471.89 புள்ளிகள் உயர்ந்து 73,550.94 ஆகவும், நிஃப்டி 444.45 புள்ளிகள் உயர்ந்து 22,328.95 ஆகவும் வர்த்தகமானது. நேற்று சென்செக்ஸ் தொடங்கி 15 நிமிடங்களிலேயே முதலீட்டாளர்களுக்கு 9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் பற்றிய பதற்றங்கள் தணிந்ததால் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று புதன் கிழமை பாசிட்டிவ் ஆக உள்ளது.
Read more ; அதிரடி ட்விஸ்ட்… NDA கூட்டணியில் பயணிக்க போகிறேன்…! சந்திரபாபு நாயுடு உறுதி…!