முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எதற்கு இத்தனை கேள்வி.. விஜய் மாநாடு நடத்தினால் உங்களுக்கு ஏன் பயம்? - தளபதிக்கு ஆதரவாக தமிழிசை..!!

Senior BJP leader Tamilisai Soundararajan has furiously questioned what is the problem in giving a place to hold the conference.
11:06 AM Sep 05, 2024 IST | Mari Thangam
Advertisement

தவெக மாநாடு நடத்த ஒரு இடத்தைக் கொடுப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? என கேள்விகள் கேட்டுள்ள நிலையில், அதற்கு விஜய் தரப்பு பதிலளிக்கவுள்ளது.

விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது என எண்ணி வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள் என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கார் ரேஸ் உங்களால் அவ்வளவு சீக்கிரம் நடத்த முடிகிறது. ஆனால் ஒரு புதிய கட்சி தொடங்கி ஒரு மாநாடு நடத்துவதற்கு ஒரு இடத்தைத் தருவதற்கு அவர் லீவுல போயிருக்கிறார்.. இவரு லீவுல போயிருக்கிறார். 21 கேள்வி, 22 கேள்வி என கேட்கிறார்கள். எந்த அளவிற்கு எதிர்க்கட்சிகளை நீங்கள் முடக்க நினைக்கிறீர்கள் என்பது தெரிகிறது. திமுகவுக்கு அவ்வளவு பயம் வந்துவிட்டது.

விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள். விஜய்யின் மாநாட்டைப் பார்த்து அச்சம் ஏன்? உங்களுக்கு ஏன் அவ்வளவு பயம், ஒரு இடத்தைக் கொடுப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது. இடத்தைக் கொடுத்தால் மடத்தை பிடித்துவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? பயம். நான் சினிமா எல்லாம் பார்ப்பது இல்லை. விஜய்யின் கட்சியைத் தடுப்பதைப் போல காட்சியையும் தடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

அவருடைய கட்சி மட்டுமல்ல எந்த புதுக்கட்சி ஆரம்பித்தாலும், ஒரு மாநாடு நடத்தும்போது, ஒரு இடத்தைக் கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்கிறேன். கொள்கை எல்லாம் அவர் பிறகு சொல்லட்டும். அதற்காக நாங்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று அர்த்தமில்லை. நீங்கள் ஒரு கார் ரேசுக்கு எவ்வளவு தூரம் சரி செய்து கொண்டுவந்தீர்கள்" என ஆவேசமாகப் பேசினார்.

Read more ; நாளைக்கு விட்டா அவ்வளவு தான்.. பத்திர ஆபிஸ் போக போறீங்களா..?இதை நோட் பண்ணுங்க

Tags :
tamilisai soundararajantn governmenttvk vijay
Advertisement
Next Article