"மோடியின் தலைமையில் பாஜக டைட்டானிக் போல் மூழ்கும்..!!" - சுப்ரமணிய சுவாமி விமர்சனம்
பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக டைட்டானிக் போல் மூழ்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும், சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து கூட்டணியில் ஆட்சியை பிடித்தது. நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததையும், 7 மாநிலங்களில் நடந்த 11 சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது குறித்தும், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தொடர்ந்து விமர்சனங்கலை முன்வைத்து வந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக டைட்டானிக் போல் மூழ்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ”பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல மூழ்குவதைப் பார்க்க வேண்டுமானால் பிரதமர் மோடியின் தலைமைதான் சிறப்புக்குரியதாக இருக்கும். 13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளானவை, பாஜக நிரந்தரமாக மூழ்கப் போவதற்கான முன் விரிசல்களை வெளிப்படுத்தி இருக்கிறது” என பகிரங்கமாக விமர்சித்துள்ளார். இதனால் பாஜக மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Read more | அனைத்து விமானங்கள் மற்றும் எஞ்சின் பாகங்களுக்கு ஒரே மாதிரியான வரி அமல்..!! – மத்திய அரசு