முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”உன் பொண்ண என் வீட்டுக்கு அனுப்பி வை”..!! ஆத்திரத்தில் மாமனார், மாமியாரை அரிவாளால் வெட்டி சாய்த்த மருமகன்..!!

Mariakumar has been constantly pressuring his father-in-law and mother-in-law to keep his wife with him.
04:01 PM Jan 21, 2025 IST | Chella
Advertisement

நெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர். இவருக்கு வயது 55. இவரது மனைவி செல்வராணி. இவர்களது மகள் ஜெனிபா (30). இவர், அதே தெருவில் வசித்து வரும் 36 வயதான மரியகுமார் என்பவரை காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மரியகுமாருக்கும், அவரது மனைவி ஜெனிபருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

இதனால் ஜெனிபர், கணவரிடம் இருந்து பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி மரியகுமார், தனது மாமனார், மாமியாரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த மரியகுமார் மாமனார் பாஸ்கர் மற்றும் மாமியார் செல்வராணி ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை..!! தீர்ப்பு எழுதிய பிறகு பேனாவின் நுனியை உடைத்த நீதிபதி..!! என்ன காரணம் தெரியுமா..?

Tags :
அரிவாள் வெட்டுகணவன் - மனைவிநெல்லை மாவட்டம்
Advertisement
Next Article