செம குஷி..!! இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை..!! சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..!! திக்குமுக்காடும் சென்னை..!!
நாட்டின் 78-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 17ஆம் தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினமான இன்று வியாழக்கிழமை என்பதாலும், சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 16ஆம் தேதி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அறிவித்திருப்பது மகிழ்ச்சியூட்டும் செய்தியாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து 4 விடுமுறை என்பதால், இன்று காலை முதலே பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும், இன்று மாலை அதிகளவில் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பயணிகள் கிளாம்பாக்கம் செல்ல ஏதுவாக அதிகளவு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க உள்ள நிலையில், தனியார் பேருந்துகள் தங்களது கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பேருந்துகள் மட்டுமின்றி ரயில்களிலும் இன்று அதிகளவு பயணிகள் பயணிக்கின்றனர். ரயில்களில் வெளியூர் பயணிக்க ஏற்கனவே ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். பேருந்துகளில் பயணிக்கவும் ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். தொடர் விடுமுறை என்பதால் விமானங்களும் தங்களது கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ளன. இது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : புற்றுநோயை உண்டாக்கும் பாமாயில்..? மக்களே சமையலுக்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்க..!!