செம குட் நியூஸ்..!! 5,00,000 பேருக்கு வேலை..!! மாஸ் காட்டும் ஆப்பிள் நிறுவனம்..!!
இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் முன்னணி டெக் சாதன உற்பத்தி நிறுவனமாக விளங்கி வரும் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் தனது தொழிற்சாலைகளை அமைத்துள்ளது. கடந்த கொரோனா காலத்தின் போது சீனாவில் இருந்து பொருட்களை உற்பத்தி செய்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆப்பிள் நிறுவனம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டது. இதனால், சீனாவுக்கு பதிலாக இந்தியாவில் முதலீடுகளை அதிகப்படுத்தவும், உற்பத்தியை பெருக்கவும் ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், வருகிற 2 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி அதன் கிளை நிறுவனங்கள் மூலமாகவும் இந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிகிறது. இந்த தொழிலாளர்களுக்காக வீடு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்க ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2022-23ஆம் ஆண்டில் 6.27 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதி செய்திருந்தது. கடந்த 2023-24ஆம் ஆண்டில் அது 12.1 பில்லியன் டாலராக அதிகரித்தது. இதனால், இந்தியாவில் இருந்து உற்பத்தியை 40 மில்லியன் டாலர்களாக உயர்த்த ஆப்பிள் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 3.32 லட்சம் கோடியாகும். 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் இந்த இலக்கை எட்ட ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்தியாவில் நம்பர் ஒன் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக சாம்சங் இருந்து வரும் போதும், அந்த இடத்தை பிடிக்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த வேலை வாய்ப்புகளை ஆப்பிள் நிறுவனம் உருவாக்குவதாக டெக் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More : ஃபிளிப்கார்டில் ஐபோன் 15 மாடல் இவ்வளவு கம்மியா..!! அதிரடி சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க..!!